

பிரதமர் - தமிழக முதல்வர் சந்திப்பை அவதூறாக விமர்சித்த ஈவிகேஎஸ்.இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இளங்கோவனைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழிசை, "பிரதமர் - முதல்வர் சந்திப்புக்கான காரணம் குறித்து ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டிருந்தும் இளங்கோவன் அந்த சந்திப்பை இழிவுபடுத்திப் பேசியது கண்டிக்கத்தக்கது. யாரையாவது விமர்சனம் செய்து அரசியல் செய்ய வேண்டும் என இளங்கோவன் நினைப்பது தவறானது.
பிரதமர் - தமிழக முதல்வர் சந்திப்பை அவதூறாக விமர்சித்த ஈவிகேஎஸ்.இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இளங்கோவன் மீது பாஜக அவதூறு வழக்கு தொடரும்" என்றார்.