

இந்தியாவில் ஆண்டுக்கு 100 யானைகளாவது கொல்லப்படு கின்றன என்று டெல்லி நேரு நினைவு அருங்காட்சியம் மற்றும் நூலகத்தின் இயக்குநர் பேராசிரி யர் மகேஷ் ரங்கராஜன் கூறினார்.
சென்னை எம்.சி.சி உயர் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் கள் ஏற்பாடு செய்த குருவிலா ஜேக்கப் நினைவு கருத் தரங்கு சென்னை ஆழ்வார்ப் பேட்டையிலுள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ‘இயற்கை மற்றும் தேசம்: சூழலியல், அடையாளம் மற்றும் நமது எதிர்காலம்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் மகேஷ் ரங்கராஜன் பேசியதாவது:
பல்வேறு தரபட்ட கலாச்சாரம் மற்றும் சூழலியலை உள்ளடக்கிய அற்புதமான நாடாக இந்தியா விளங்குகிறது. இயற்கையை பேணுவதில் நமக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. நமது நாட்டுக்கென்று தேசிய விலங்கும், மாநில விலங்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை நமது கடந்த காலங்களை அடை யாளப்படுத்துகிற உருவப்படங் களாக இல்லாமல், நமது எதிர் காலம் குறித்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
உலகளவில் ஆசிய யானை களை அதிகம் கொண்டுள்ள தேசம் இந்தியாதான். சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் யானைகள் இந்தியாவில் உள்ளன. ஆனால் ஆண்டுக்கு 100 யானைகளாவது நம் நாட்டில் கொல்லப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் யானைகள் வருவதாக சொல்லப்படுகிறது. உண்மையில் யானைகள் நட மாடும் வழித்தடத்தில்தான் நெடுஞ் சாலைகள் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பார்வையாளர்களின் கேள்வி களுக்கு பேராசிரியர் மகேஷ் ரங்கராஜன் பதிலளித்தார். நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ‘இந்து’ என்.முரளி நன்றி கூறினார். ‘இந்து’ என்.ராம், ‘இந்து’ என்.ரவி உட்பட ஏராள மானவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.