கணவர் இறந்த அதிர்ச்சி: மனைவியும் உயிரிழப்பு

ஜெயராமனுடன் வீரகங்கா
ஜெயராமனுடன் வீரகங்கா
Updated on
1 min read

கலசப்பாக்கம் அருகே கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்ஜெயராமன் (97). இவர், நேற்றுமுன்தினம் இரவு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு,அதி காலை 1 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அதற்குள் அவர் உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அவரது மனைவி வீரகங்கா(84) மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அடுத்த சில மணி நேரத்தில், வீரகங்காவும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in