Published : 16 Feb 2020 04:01 PM
Last Updated : 16 Feb 2020 04:01 PM

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறுமுஸ்லிம் அமைப்புகள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறுஇடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர், போலீஸார் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடிநடத்தி கலைந்துபோக செய்தனர்.அன்று இரவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனால் பல சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில், முஸ்லிம்கள் மீதுபோலீஸார் நடத்திய தடியடியைக் கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. திருநெல்வேலி மேலப்பாளையம், தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதி, காயல்பட்டினம், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறுமுஸ்லிம் அமைப்புகள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறுஇடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், போலீஸார் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடிநடத்தி கலைந்துபோக செய்தனர்.அன்று இரவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனால் பல சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்நிலையில் நேற்று காலை,உயிரிழந்தவரின் உடலுடன்முஸ்லிம் அமைப்பினர் வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து, பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில், முஸ்லிம்கள் மீதுபோலீஸார் நடத்திய தடியடியைக் கண்டித்து நேற்று தமிழகம்முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. திருநெல்வேலி மேலப்பாளையம், தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதி, காயல்பட்டினம், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன், தேனிக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன், திண்டுக்கலுக்கு ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x