

மதுரையில் பெய்த பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்தார்.
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள பாப்பனோடையைச் சேர்ந் தவர் முருகன். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு 4 குழந்தை கள். இவருக்கு தொகுப்பு வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதனால் இவர்கள் பழைய மண் வீட்டில் தங்கினர்.
புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக காலை 6 மணி அளவில் பக்கத்தில் இருந்த வீட்டின் மண் சுவர் இடிந்து, இவர்களது வீட்டின் மீது விழுந்தது. இதில் இவர்களது வீடும் இடிந்து, கட்டிலில் படுத் திருந்த சிறுமி மோகனாதேவி (8) சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். முருகன், ராணி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேர் காய மடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரம் விழுந்து2 பெண்கள் பலி
உதகையில் பந்தலூர் அருகே மரம் விழுந்ததில், அரசு தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்து வந்த இரு பெண்கள் உயிரி ழந்தனர். படுகாயமடைந்த மற் றொரு பெண் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார். நீலகிரியில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் குறைந்த அளவே மழை பெய்து வருகிறது. கூடலூரில் 5 மி.மீ., தேவா லாவில் 3 மி.மீ. மழை மட்டுமே பதிவாகி உள்ளது.
பந்தலூர் தாலுகாவில் அரசின் தேயிலை தோட்டங்கள் (டான்டீ) உள்ளன. இவற்றில் நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். வியாழக்கிழமை பந்தலூர் அருகேயுள்ள நெல்லியாளம் பகுதி யில் உள்ள டான்டீ ரேஞ்ச் 3 பகுதியில் திடீரென மரம் விழுந்ததில் அங்கு பணிபுரிந்து வந்த ஜானகி (52), மகேஸ்வரி (48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சீதாலட்சுமி என்ற பெண் படுகாய மடைந்தார். அவர் சிகிச்சைக்காக பத்தேரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
ஜானகி, மகேஸ்வரி ஆகியோரது உடல்கள் பந்தலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டுள்ளன.