

தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த சம்மேள னத்தின் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியுள்ள தாவது:
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய காந்திய வாதி சசிபெருமாள், அதே இடத்தில் மரணமடைந்தார். அந்த சம்பவம், ஜனநாயகத்தின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டோரை கவலையடைய செய்துள்ளது.
உண்ணாமலைக்கடை மக்களின் உணர்வுகளுக்கு மதிப் பளித்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடி யிருந்தால்கூட சசிபெருமாளின் மரணத்தை தடுத்திருக்கலாம். ஆனால், அதிகாரிகளின் அலட்சி யத்தின் விளைவாக, டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பல இடங்களில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலிலும் தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றை அகற்றக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத் தின்போது, உணர்ச்சிவசப்பட்ட போராட்டக்காரர்கள் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து ஊழியர் களை உள்ளே வைத்து பூட்டினர்.
இந்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்களிடையே அதிர்ச்சியை யும், பதற்றத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. அரசாங்கத்தின் மீதான கோபத்தை, அப்பாவி கடை ஊழியர்களிடம் காட்டுவதை ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள். டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்த தனது நிலைபாட்டை அரசு காலம் தாழ்த்தாமல் அறிவிப்பதுடன், மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.