Published : 15 Feb 2020 07:44 AM
Last Updated : 15 Feb 2020 07:44 AM

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்: ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

சென்னை

தமிழகத்தில் நேற்று வெளியிடப் பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, 6 கோடி 13 லட்சத்து 6 ஆயி ரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, கடந்த ஜனவரி 1-ம் தேதியை தகுதிநாளாக கணக்கிட்டு, வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை முன் னிட்டு, டிசம்பர் 23-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இப்பட்டியலின்படி, தமிழகத்தில் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 ஆண், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பெண், 5 ஆயிரத்து 924 மூன்றாம் பாலினத்தவர் என 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் இருந்தனர்.

தொடர்ந்து இப்பட்டியலை வெளியிட்ட நாளில் இருந்து வாக் காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி, இந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த திருத்தப் பணிகளின்போது, ஜனவரி 4, 5,11 மற்றும் 12 ஆகிய 4 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்கள், இணையதளம், கைபேசி செயலி மற்றும் வாக்காளர் பதிவு அதி காரியிடம் வழங்கப்பட்டது என பெயர் சேர்த்தலுக்கு 14 லட்சத்து 65 ஆயிரத்து 890 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 14 லட்சத்து 2 ஆயிரத்து 464 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.

இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ, நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில், 3 கோடி 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 ஆண், 3 கோடி 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 497 பேர் என 6 கோடி 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலைவிட, 6 லட்சத்து 7 ஆயிரத்து 885 ஆண், 6 லட்சத்து 96 ஆயிரத்து 851 பெண், 573 மூன்றாம் பாலினத்தவர் என 13 லட்சத்து 5 ஆயிரத்து 309 வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆண் வாக்காளர்களை விட 7 லட்சத்து 91 ஆயிரத்து 797 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

தமிழகத்தில் அதிக வாக்காளர் களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் (6 லட்சத்து 60 ஆயிரத்து 317), குறைந்த வாக் காளர்களை கொண்ட தொகுதியாக துறைமுகம் (1 லட்சத்து 73 ஆயி ரத்து 337) உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் 16 பேரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 3 லட்சத்து 22 ஆயிரத்து 167 ஆண்கள், 2 லட்சத்து 63 ஆயிரத்து 243 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 200 பேர் என 5 லட்சத்து 85 ஆயிரத்து 680 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியின் ‘http://elections.tn.gov.in’ என்ற இணையதள முகவரியில் சரிபார்த் துக் கொள்ளலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், தகுதியானவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரியை அணுகியும், இணைதயளம், கைபேசி செயலி மூலமும் சேர்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x