

அம்மா உணவகத்தை மேலும் விரிவாக்க பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அம்மா உணவகத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகத் திட்டத்திற்காக ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மீது இதற்கான நிதிச்சுமை விழாமல் செயல்படுத்துவதற்காகவும் “இலாப நோக்கமற்ற” ஒரு சிறப்பு நோக்கு முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகத் திட்டத்தைச் திறம்பட செயல்படுத்துவதற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்பு மற்றும் நன்கொடை பங்களிப்புகளை இந்த ‘ சிறப்பு நோக்கு முகமை’ சேகரிக்கும் பணியைச் செய்யும், அம்மா உணவகத்துக்காக ரூ.100 கோடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அம்மா உணவகங்களுக்கு தொடர்ந்து மானிய விலையில் உணவுப் பொருட்களை அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கே அம்மா உணவகத்தைக் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.