

பொள்ளாச்சி அடுத்த நெகமம்அருகே உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படுகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஈராசிரியர் பள்ளியான இந்த பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் மாகாளியப்பன்(52).
இவர் கடந்த சில நாட்களாக 4 மற்றும் 5–ம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், தலைமை ஆசிரியர் மாகாளியப்பன் விடுமுறையில் சென்றுள்ளார். மாணவிகளுக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு அளித்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிகடந்த 11–ம் தேதி பொதுமக்கள் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் மறியல் செய்தனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்தால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெற்றோர் யாரும் புகார் அளிக்காததால் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சாந்தாமணி அளித்த புகாரின் பேரில் நெகமம் போலீஸார் மாகாளியப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று அவரை கைது செய்தனர்.