

திருவாரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) தொடங்கியுள்ள ஆரம் பக்கட்ட ஆராய்ச்சி திட்டப் பணிக்கு இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தமிழக காவிரி விவசாயி கள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:
ஓஎன்ஜிசி நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருவா ரூரை சுற்றியுள்ள காவிரி ஆற்றுப் படுகையில் ஆராய்ச்சி திட்டப்பணி ஒன்றைத் தொடங்கி யுள்ளது. இத்திட்டம் தொடர்பாக அப்பகுதி வாழ் மக்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை.
இப்பணிக்கு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிய அனுமதி பெற வேண்டி யது கட்டாயம். ஆனால் எந்த அனுமதியும் ஓஎன்ஜிசி பெறவில்லை. இது தொடர் பாக ஓஎன்ஜிசி நிறுவனம் முரணான தகவலை தெரிவித்து வருகிறது.
இத்திட்டத்தின் விளைவால் திருவாரூர், தஞ்சாவூர், நாகப் பட்டினம் ஆகிய மாவட்டங் களில் விவசாயம் பாதிக்கப் படுவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். எனவே ஓஎன்ஜிசி மேற்கொள்ளும் ஆரம்பக்கட்ட பணிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு அமர்வின் நீதித் துறை உறுப்பினர் பி.ஜோதி மணி, தொழில் நுட்பத் துறை உறுப்பினர் பேரா சிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகி யோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக் கறிஞர் சிவ.ராஜசேகரன், பழனி செல்வராஜ், வி.ஜெ.அருள்ராஜ் ஆகியோர் ஆஜராகி, சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஓஎன்ஜிசி மேற்கொள்ளும் ஆராய்ச்சி திட்டப் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
சுற்றுச்சூழல் அனுமதியின்றி எப்படி ஆராய்ச்சி திட்டப் பணி களைத் தொடங்க முடியும்? என்று அமர்வின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது வழக்கு ஒன்றில் ஆஜராக வந்திருந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஓஎன்ஜிசி திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என் றார். அந்த சமயம் அமர்வின் உறுப்பினர்கள், இந்த வழக்கில் ஆலோசனைகளை வழங்க வைகோவுக்கு அழைப்பு விடுத் தனர். அதை வைகோ ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அமர்வின் உறுப் பினர்கள், காவிரி ஆற்றுப் படுகையில் ஓஎன்ஜிசி மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி திட்டப் பணிக்கு இடைக் காலத் தடை விதித்து, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.