Published : 14 Feb 2020 07:32 AM
Last Updated : 14 Feb 2020 07:32 AM

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

தமிழக அரசின் 2020-21-ம் நிதி யாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப் பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல் வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய் கிறார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடக்கும் என கூறப்படுகிறது. அதேபோல அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அதனால், இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள், சலுகைகள், திட்டங்கள் இடம்பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வி, சமூக நலன், பொதுப்பணி, வீட்டு வசதி உள்ளிட்ட துறைகளில் புதிய சில திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாணவர்கள் இடை நிற் றலை முற்றிலும் தவிர்க்கவும் அவர் களுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்கும் வகையிலும் காலை உணவு திட்டம் அறிவிக்கப்படலாம். அத்துடன், அவர்களுக்கான ஊக்கத்தொகையிலும் மாற்றம் வரலாம் என தெரிகிறது.

பெண்களுக்கான திருமண உதவித்தொகை அதிகரிப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கூடு தல் சலுகைகள் உள்ளிட்டவையும் பட்ஜெட்டில் இடம்பெறக் கூடும். முதல்வராக பழனிசாமி பொறுப் பேற்று வரும் 17-ம் தேதியுடன் 3 ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெறுகிறது. இதை கொண்டாடும் வகையில் சில அறிவிப்புகள் வெளி யாக வாய்ப்புள்ளது. பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறி விக்கப்படும் காவிரி டெல்டா பகுதி கள் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளது. இதை யொட்டி அந்த மாவட்டங்கள் சார்ந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை வாசித்து முடித்ததும் பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுபெறும். அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட் ஜெட் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது என்று முடிவு செய்யும். பிப்.17 முதல் 21-ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடக்கும் என்றும், ஒருவார இடைவெளிக்குப் பிறகு மார்ச் முதல் வாரத்தில் இருந்து மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடக்கும் என்றும் சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தீர்மானம்

இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினை களை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, நீட் தேர்வு, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறி விப்பு, குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை குறித்த விவகாரங்கள் பேரவையில் எழுப்பப்படும் என தெரிகிறது.

ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி

சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் நினைவிடத் துக்கு சென்று மரியாதை செலுத்து கிறார். பின்னர், தலைமைச் செய லகம் வந்து முதல்வர் பழனி சாமியை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

‘ ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்தும்’

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி நேற்று கூறும்போது, “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விவரங்களை, அவர் சார்ந்த அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தேர்தல் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்தும். வேட்பாளர்களின் பின்னணியை கருத்தில் கொண்டு வாக்களிப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைக்கும்” என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறும்போது, “குற்றப் பின்னணி கொண்டவர்களை வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை (ஆனந்த் சிங்) எம்எல்ஏ-வாக ஆக்கியதுடன் அவருக்கு அமைச்சர் பதவியையும் பாஜக வழங்கி உள்ளது. அக்கட்சி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா?” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x