

அதிமுக எம்பி-யான சசிகலா புஷ்பா பாஜகவில் இணைவார் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். புஷ்பாவை அதிமுகவிலிருந்து பிரித்ததும் தாமரைக்கட்சிக்கு தள்ளிவிட்டதும் திமுக சர்க்கிளில் உள்ளவர்கள் என்கிறார்கள். இந்த விவகாரம் தெரிந்ததும் அதிமுக முகாம் ஏகத்துக்குக் குழம்பிக் கிடக்கிறது. இதனிடையே, தமிழகத்தில் பெண்கள் மத்தியில் பாஜகவுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை. அதைச் சரிசெய்யும் விதமாக சசிகலா புஷ்பாவுக்கு பாஜக மகளிரணியில் முக்கியப் பொறுப்பைக் கொடுத்து களத்தில் இறக்கிவிட இருப்பதாக செய்திகள் கசிகின்றன.
- காமதேனு இதழிலிருந்து (பிப்ரவரி 16,2020)