

தொன்போஸ்கோ இளைஞர் மன்றத்தின் பவள விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
1944-ம் ஆண்டு அருட்தந்தை பிரான்சிஸ் ஸ்லூஸ் அடிகளார் தொன்பொஸ்கோ இளைஞர் மன்றத்தைத் தொடங்கினார். சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றம் தற்போது 75 ஆண்டுகளைக் கடந்து நூற்றாண்டை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.
சென்னை பிராட்வே பகுதியில் உள்ள இளைஞர்கள் நல்வாழ்விற்கு தொன்போஸ்கோ இளைஞர் மன்றம் அரும்பணி ஆற்றி வருகிறது. இந்த மன்றத்தில் இருந்து விளையாட்டு, திரைப்படம், நாடகம், சாரணியம் என பல துறைகளில் பலர் உயர் நிலையை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தொன்போஸ்கோ இளைஞர் மன்றத்தின் பவள விழா சென்னை, பிராட்வே பகுதியில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சென்னை - மயிலை மாவட்ட பேராயர் அருட்தந்தை டாக்டர். ஜார்ஜ் அந்தோணிசாமியின் திருப்பலியுடன் பவள விழா தொடங்கியது. சிறப்பு நிகழ்ச்சிகளாக ஆன்மிகம், விளையாட்டு, கலை, சாரணியம், சமூக சேவை எனப் பல்வேறு துறைகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னையில் உள்ள இளைஞர் மன்ற அங்கத்தினர்கள், பள்ளி மாணவர்கள், மாணவிகள், பங்கு இளைஞர்கள் எனப் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.