

நடிகர் விஜயை குறிவைத்துத் தூக்கிய வருமானவரி துறையினர் சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன் வீட்டிலும் ரெய்டு நடத்தி கோடிகளை அள்ளினார்கள். அன்புச் செழியன் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருப்பதால் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் இதுகுறித்து கருத்து கேட்டார்கள் பத்திரிகையாளர்கள். அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் ராக்கெட் விட்ட ராஜூ, "நடிகர் விஜய் மட்டுமில்லை... ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான். தவறு செய்தவர்கள் மீதான நடவடிக்கையில் அதிமுக அரசு தலையிடாது" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். இந்தத் தகவல் உனடியாக அன்புச் செழியனின் காதுக்குப் போக, “கோடி கோடியா சேர்த்து வெச்சுட்டு பேசுற பேச்சப் பாரு... நாளைக்கி அவுக வீட்ல ரெய்டு நடந்தாலும் இப்படித்தான் பேசுவாரா?" என்று கடுகடுத்தாராம் அன்பு.
- காமதேனு இதழிலிருந்து (16 பிப்ரவரி, 2020)