Published : 13 Feb 2020 07:59 AM
Last Updated : 13 Feb 2020 07:59 AM

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்; ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை: மாணவர்களுக்கு தேர்வுத் துறை எச்சரிக்கை

பொதுத்தேர்வின்போது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.

இந்நிலையில் பொதுத்தேர்வுக் கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: அனைத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மையங் களையும் அந்தந்த மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்புடன் இருப்பதை உறுதிசெய்ய வேண் டும். கட்டுக்காப்பு மையங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருப்பதுடன், தனி காவலரையும் பாதுகாப்புக்கு பணியமர்த்த வேண்டும்.

இதேபோல், தேர்வு மையங் களாக செயல்படும் பள்ளிகளில் எவ்வித கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருக்க வேண்டும். மேலும், தேர்வு நாட்களில் அப் பள்ளிகளில் படிக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காலையில் விடுமுறை அளிக்க வேண்டும்.

தேர்வுப்பணிகளுக்கும் எக்கார ணம் கொண்டும் தனியார் பள்ளி களின் முதல்வர்கள் அல்லது ஆசிரி யர்களை நியமனம் செய்யக் கூடாது. பறக்கும்படை உறுப்பினர், அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளவர்கள் அன்றைய பாடத்தை நடத்தும் ஆசிரியர்களாக இல்லாமல் இருக்க வேண்டும்.

தேர்வறைக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. இதை மீறினால் ஆசிரியர்கள், மாணவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முதன் மைக் கல்வி அதிகாரிகள் எழுத்துப் பூர்வமான ஆணைகள் வழியாக மட்டுமே பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். ஒரு போதும் வாய்மொழி ஆணைகள் தரக்கூடாது.

இவைதவிர தேர்வின்போது காப்பி அடித்தல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட் டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல் களில் ஈடுபடும் தேர்வர்கள் அதிக பட்சம் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும், தேர்வர்கள் ஆள்மாறாட்டம் செய் தது கண்டறியப்பட்டால் உடனே காவல்துறையிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.தேர்வு நாட்களில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காலையில் விடுமுறை அளிக்க வேண்டும்.தேர்வுப்பணிகளுக்கு எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x