Published : 13 Feb 2020 07:49 AM
Last Updated : 13 Feb 2020 07:49 AM

ஸ்மார்ட் நகரங்கள் தரவரிசை கணக்கெடுப்பு: சென்னை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சகம் சார்பில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஸ்மார்ட் நகரங்களுக்கு சிறப்பான வாழ்வாதார குறியீட்டின் அடிப்படையில் தரவரிசை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை வாழ்க்கைத் தரம், பொருளாதாரத் திறன், நிலைத் தன்மை ஆகிய 3 அங்கங்களாகவும், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, தங்குமிடம், தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாப்பு, பயண வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், பொருளாதார மேம்பாடு, பொருளாதார வாய்ப்புகள், சுற்றுச்சூழல், பசுமை இடங்கள் மற்றும் கட்டிடங்கள், எரிசக்தி நுகர்வு, நகர மீள்சக்தி உட்பட 14 பிரிவுகளாகவும், மேலும், 50 காரணிகளைக் கொண்டும் இந்த தரவரிசை கணக்கெடுப்பு மதிப்பிடப்பட உள்ளது.

பொதுமக்களின் கருத்துகளை அறிய, மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சகம் http://eol2019.org/CitizenFeedback, என்ற இணையதளத்தில் “Citizen Perception”ன் கீழ் கருத்துகளை பதிவு செய்யும் கேள்வி படிவத்தை வடிவமைத்துள்ளது. பொதுமக்கள் இந்த ஆய்வில் பங்கேற்று, சென்னை குறித்த தங்கள் கருத்துகளை பதிவிடலாம். மேலும், #MyCityMyPride என்கிற தலைப்பில் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் மூலமும் கருத்துகளை பதிவு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x