பாதுகாக்கப்பட்ட சிறப்பு காவிரி வேளாண் மண்டலம்; புதிய தனிச்சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

பாதுகாக்கப்பட்ட சிறப்பு காவிரி வேளாண் மண்டலம்; புதிய தனிச்சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
Updated on
1 min read

மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், அரசின் முடிவை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் முந்தைய திமுக ஆட்சியில்தான் தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் இத்திட்டத்துக்கு வித்திடப்பட்டது. 1996-ம் ஆண்டு ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. அதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் டி.ஆர்.பாலு, இத்திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடிவெடுத்து, 2010-ல் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றார். அதேபோல ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வுப் பணி தொடங்க, தனியார் நிறுவனத்துக்கு 2011-ம் ஆண்டில் 4 ஆண்டுகளுக்கு அனுமதி அளித்தது திமுக அரசுதான். அதுவும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்தான், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அன்று, டெல்டா விவசாயிகளை பாதுகாக்கத் தவறியவர்கள், இன்று அதிமுக அரசு துணிச்சலுடன் எடுத்த நடவடிக்கைக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு பொறுக்க முடியாமல் மக்களை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசின் அறிவிப்பை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கும் நிலையில், அதுபற்றி எதிர்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை, அரசின் அறிவிப்பை எதிர்ப்பதாகவே உள்ளது என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆதரவாக உள்ளது என்றும் மக்களால் பார்க்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக ஸ்டாலின் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்துக்கும் உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய தனிச்சட்டம், தமிழக அரசால் விரைவில் இயற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in