

கோவளம் பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்த 5 நாய்களை துப்பாக்கி யால் சுட்டுக்கொன்றதாக ஒரு வரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவளம் கடற்கரை பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்த நாய்களை, அதேப்பகுதியில் வசிக்கும் நரிக் குறவ இனத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர், துப்பாக்கியால் சுட்டு 5 நாய்கள் உயிரிழந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த புளுகிராஸ் அமைப்பினர், இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீ ஸில் புகார் அளித்தனர். இதை யடுத்து, நாய்களை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், நாய்களின் உடல்களை மீட்டு புளுகிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீஸார் கூறும்போது, ‘கோவ ளம் ஊராட்சி நிர்வாகத்தின் உத்தர வின்பேரில் நாய்களை சுட்டதாக, கைது செய்யப்பட்ட நபர் தெரி வித்துள்ளார். இவர் மீது, மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.
இதுதொடர்பாக, கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி ராமன் கூறும்போது, ’சுதந்திர தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில், கோவளம் ஊராட்சியின் 9-வது வார்டு பகுதியில், குரங்குகள் மற்றும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து தெருக்களில் சுற்றித்திரி கிறது. இதனால், சாலையில் நடமாட அச்சமாக உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, குரங்குகளை பிடிக்க ஊராட்சி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும், அப்பகுதி கவுன்சிலர் தீனன் மூலம், திருக் கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் மூலம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிந்த 40 குரங்களை பிடித்து, ஆஞ்சநேயர் மலையை ஒட்டியுள்ள வனப்பகுதி யில் விட்டோம். அதேபோல், நாய் களையும் பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விடுமாறு நரிக்குறவர்களிடம் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் தவறுதலாக நாய்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு வனச்சரகர் கோபு கூறியதாவது: தனிப்பட்ட நபர்கள் அல்லது தனிப் பட்ட அமைப்பினர் குரங்குகளை பிடிக்க அனுமதியில்லை. ஊராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடிக்க வனத்துறையிடம் அனுமதி பெறாமல், குரங்குகளை பிடித்த செயல் சட்டவிரோதமானது. மேலும், தெருநாய்களை வனப்பகு தியில் விடவும் அனுமதியில்லை. ஆனால், தெருநாய்களை வனப் பகுதியில் விட முயற்சித்துள்ளனர். இதுதொடர்பாக, கோவளம் ஊராட்சி தலைவரிடம் விசாரித்து நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.