Published : 11 Feb 2020 21:04 pm

Updated : 11 Feb 2020 21:04 pm

 

Published : 11 Feb 2020 09:04 PM
Last Updated : 11 Feb 2020 09:04 PM

உச்சநீதிமன்றம் குட்டு: இனியாவது எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுங்கள்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை

seven-men-release-supreme-court-order-stalin-s-advice-to-the-tamil-nadu-government

எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரிடம் பதில் கேட்டு சொல்லுங்கள் என உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இனியாவது ஆளுநரை வற்புறுத்தி நல்ல முடிவெடுங்கள் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வநதபோது தமிழக அரசு தரப்பில், ஏழுபேர் விடுதலை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மேலும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் கொடுக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.

ஆளுநரும் ஒரு அரசின் பிரதிநிதிதானே, அவரிடம் அரசு தான் கேட்க வேண்டும். விடுதலை தொடர்பான தீர்மானம் போட்டு அனுப்பியது தொடர்பாக ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்களல்ல.

விடுதலை செய்வது என்ற தீர்மானம் தொடர்பான கோப்புகள் குறித்து அரசு தான் கேட்க வேண்டும், எனவே தீர்மானம் மீதான முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு 2 வார்த்தில் தெரிவியுங்கள்?. என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் தனது பதிவிட்டுள்ளார். அவரது பதிவு:

"பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு" அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அமைச்சரவை தீர்மானம் மற்றும், மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" வைத்துள்ளது. எனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Seven menReleaseSupreme courtOrderStalinAdviceTamil NaduGovernmentஉச்சநீதிமன்றம்குட்டுஎழுவர் விடுதலைதமிழக அரசுஸ்டாலின்அறிவுரை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author