தமிழகத்தில் மழை தொடரும்

தமிழகத்தில் மழை தொடரும்
Updated on
1 min read

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் 11 செ.மீ., திருவள்ளூர், தருமபுரி மாவட்டம் அரூரில் 7 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர் மாவட்டம் கொடவாசல் ஆகிய இடங்களில் 6 செ.மீ., சேலம் மாவட்டம் ஓமலூர், அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான், கடலூர் மாவட்டம் சிதம்பரம், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, வேலூர் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை நேற்று முன் தினம் பெய்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 36.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியிருந்தது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in