சிங்கப்பூர் கல்வி நிறுவனத்துடன் வேல்ஸ் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்: உலகத்தரம் வாய்ந்த கல்வி கற்க வாய்ப்பு

சிங்கப்பூர் கல்வி நிறுவனத்துடன் வேல்ஸ் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்: உலகத்தரம் வாய்ந்த கல்வி கற்க வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் சிங்கப் பூரைச் சேர்ந்த எம்டிஐஎஸ் கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை இங்கேயே பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேல்ஸ் பல் கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேல்ஸ் கல்விக் குழுமம் 1992-ம் ஆண்டில் தொடங்கப்பட் டது. இது தற்போது 15 கல்வி நிறுவனங்களுடன், 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்களு டன் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இப் பல்கலைக்கழகம் 13 கல்விப் புலங்கள், 38 துறைகள், 100-க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளைக் கொண்டு உள்ளது. பொறியியல், பல் மருத்துவவியல், மருந்தியல், கலை மற்றும் அறிவியல், உணவக மேலாண்மையியல், கப்பல் சார் கல்வியியல் என பல பாடப்பிரிவுகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.

இதேபோல சிங்கப்பூரில் 1956-ல் தொடங்கப்பட்ட எம்டிஐஎஸ் கல்வி நிறுவனம் பல்வேறு தொழில் மற்றும் மேலாண்மை பாடப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இக்கல்வி நிறுவனம் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில், வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், எம்டிஐஎஸ் கல்வி நிறுவனமும் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மை யில் செய்துகொள்ளப்பட் டுள்ளது. இதன்மூலம் எம்டிஐஎஸ் கல்வி நிறுவனத்தால் நடத் தப்படும் புகழ்பெற்ற பாடப் பிரிவுகளை இந்திய மாணவர்கள் இங்கிருந்தே கற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த சண்டர்லேண்ட் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் எம்.பி.ஏ. படிப்பு, பி.ஏ. (ஹானர்ஸ்) படிப்பில் பிசினஸ் அண்டு மார்க்கெட்டிங், அக்கவுன்டிங் மற்றும் நிதி மேலாண்மை ஆகிய பட்டப் படிப்புகள், இங்கிலாந்தின் பேங்கர் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் பி.எஸ்சி. (ஹானர்ஸ்) படிப்புகளான பிசினஸ் ஸ்டடீஸ் அண்டு ஃபைனான்ஸ், பாங்கிங் அண்டு ஃபைனான்ஸ் ஆகிய படிப்புகள் இங்கு கற்பிக்கப்படும்.

மேலும் தொழில் மேலாண்மை, தொழில் மேலாண்மை (சர்வ தேச தொழில்கள்) ஆகியவற்றில் அட்வான்ஸ்டு டிப்ளமா படிப்பு களும், தொழில் மேலாண்மை, மார்க்கெட்டிங், அக்கவுன்டிங் ஆகியவற்றில் டிப்ளமா படிப்பு களையும் இங்கு கற்க வழி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வேல்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in