

தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் தமிழகத்தின் அமமுக உள்ளிட்ட 9 கட்சிகள் இடம் பெற்றுள் ளன.
தேர்தல் ஆணையம் தேசியஅளவில் கட்சிகளை 3 பிரிவாகவகைப்படுத்துகிறது. இதன்படி,அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள், அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகள் என்றஅடிப்படையில் வகைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அவ்வப்போது பதிவு செய்யும் கட்சிகள், போட்டியிடும் இடங்கள், வெற்றிபெறும் இடங்கள்மற்றும் வாக்கு சதவீத அடிப்படையில், அந்த கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு தனிச்சின்னம் பெறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் 2,487-ல் இருந்து, 2,543 ஆக உயர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட கட்சிகளை பொறுத்தவரை அவை போட்டியிடும் தொகுதிகள் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல் இருந்தால் பொதுச்சின்னப் பட்டியலில் இருந்து அந்த கட்சி கோரும் ஒரு சின்னம் தனிச்சின்னமாக தேர்தலின் போது வழங்கப்படும்.
இந்நிலையில், சமீபத்தில் தேர்தல் ஆணையம் அரசிதழில்அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், நாடு முழுவதும் இருந்து பதிவு செய்யப்பட்ட 56 கட்சிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 9 கட்சிகள் உள்ளன. குறிப்பாக, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மகாத்மா மக்கள் சேவை பேரியக்கம், திருப்பத்தூரில் இருந்து இயங்கும் மக்கள் அரசியல் கட்சி, திருச்சி கே.கே.நகரில் இயங்கும் அவர் மகாத்மா நேஷனல் பார்ட்டி, திருவாரூரில் இருந்து இயங்கும் தேசிய மக்கள் பேரியக்கம், சென்னை அசோக் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அம்மா மக்கள் முன் னேற்ற கழகம் (அமமுக), சென்னை மடிப்பாக்கத்தில் இருந்து இயங்கும் திராவிட முற்போக்கு மக்கள் கட்சி, சென்னை அயப்பாக்கத்தில் இருந்து இயங்கும் சென்னையூத் பார்ட்டி, பட்டா பிராமில்இருந்து இயங்கும் எம்ஜிஆர்மக்கள் கட்சி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதில், டிடிவி தினகரனின்அமமுகவை பொறுத்தவரை,கடந்த மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தனிச்சின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்திலேயே போட்டியிட்டது. அப்போது அக்கட்சி பதிவு செய்யப்படாத நிலையில், நீதிமன்றத்தை நாடி சின்னத்தை பெற்றது.