Published : 10 Feb 2020 10:15 AM
Last Updated : 10 Feb 2020 10:15 AM

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயணிகள் எளிதாக செல்ல வழிகாட்டி ஸ்டிக்கர்

மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும் இடத்தை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் சாலையோரங்களில் வழிகாட்டி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் இடத்தை மக்கள் எளிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அந்த வகையில், முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பேருந்து ரயில் நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், ஐ.டி. நிறுவனங்களை இணைக்கும் வகையில் ஷேர் ஆட்டோ, ஆட்டோ, சிறிய ரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளிடையே வரவேற்பு

குறைவான கட்டணமாக இருப்பதால், பயணிகளிடயே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தச் சேவை குறித்து பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் இணைப்பு வாகனங்களின் புறப்பாடு மற்றும் வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

பாதைகள் வரைந்து விளக்கம்

இதேபோல் பரங்கிமலை, கிண்டி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இணைப்பு வாகன வசதி இருக்கும் இடத்தை குறிப்பிடும் வகையில் தரைகளில் ‘பாதைகள் வரைந்து’ விளக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக ரயில் நிலையங்களை எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சாலை மற்றும் மேம்பாலத் தூண்களில் இந்த ஸ்டிக்கர்கள் காணப்படுகின்றன. அதில், அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் எவ்வளவு தூரம் உள்ளது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பு ஸ்டிக்கர்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் இடத்தை மக்கள் எளிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x