தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:

தென் தமிழகம் முதல் மஹாராஷ்டிர மாநிலம் வரை நிலவி வந்த காற்று சுழற்சி வலுவிழந்துவிட்டது. தற்போது வங்கக் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று தமிழகம் நோக்கி வீசி வருகிறது. அதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிருஇடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான தூரல் மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி, பகல்நேர வெப்பநிலையில் அதிகபட்சமாக மதுரைதெற்கில் 35.6 டிகிரி, மதுரை விமானநிலையம், கரூர் பரமத்தி ஆகியஇடங்களில் தலா 34 டிகிரிசெல்சியஸ் வெயில் பதிவாகியுள் ளது. இரவுநேர வெப்பநிலையில் குறைந்தபட்சமாக உதகமண்டலத்தில் 8.1 டிகிரி, கொடைக்கானலில் 10.2 டிகிரி, குன்னூரில் 12 டிகிரி, வால்பாறையில் 13 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in