

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயலி மூலம் தொலைபேசி, போஸ்ட்பெய்டு மொபைல் மற்றும் இன்டர்நெட் கட்டணத்தை செலுத்தினால், ஒருசதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரைவழி தொலைபேசி, போஸ்ட்பெய்டு மொபைல் மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றுக்கு ஆன்லைன் மூலம் பணம்செலுத்தும் வாடிக்கையாளர் களுக்கு கட்டணத்தில் ஒருசதவீதம் தள்ளுபடி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மை பிஎஸ்என்எல் என்ற செயலி (ஆப்) மூலம், தொலைபேசி, போஸ்ட்பெய்டு மொபைல் மற்றும் இன்டர்நெட் மூலம் கட்டணம்செலுத்தும் வாடிக்கையாளர் களுக்கு கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இச்சலுகை வரும் மார்ச் 31-ம் தேதி அமலில் இருக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 50 சதவீத ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்று விட்டதால், தற்போது இருக்கும் ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் இந்தச் சலுகை அறிவிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.