

சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்து வருவதால் ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.200 உயர்ந்துரூ.31 ஆயிரத்து 184-க்கு விற்பனை செய்யப்பட்டது.
முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவிலும் உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.200 உயர்ந்துரூ.31 ஆயிரத்து 184-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒருகிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து898-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 873-க்கு விற்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுமார் 20% வரை விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.