

இதுகுறித்து மருத்துவர் சங்க தலைவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர் என சந்தேகப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள், தமிழகத்தில் போதுமானதாக இல்லை. இது கவலை அளிக்கிறது. தமிழக அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், நவீன கருவிகள் இல்லை . மருத்துவர்கள், மருத்துவத்துறை பணியாளர்களின் பற்றாக்குறையும் மிகக் கடுமையாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான, பாதுகாப்பு கவச உடைகள் மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்படவில்லை.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்காமல், அவர்களை,கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர் என சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க கட்டாயப் படுத்தியுள்ளனர். இது கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக கொரோனா வைரஸ் வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள்,மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்கிட வேண்டும்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!