

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் முருகனின் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி காலை, மாலை இரு வேளைகளில் வீதி உலா வந்தது. கடந்த 4-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற்றது.
இன்று தைபூச தினத்தையொட்டி உற்சவர் சுப்ரமணியர் தேவசேனா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரகணக்கான பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரிய ரத வீதியில் உள்ள ஆண்டவர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.