

ஒரு பவுன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.20 ஆயிரத்தைத் தாண்டியது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 அதிகரித்தது.
சில மாதங்களாக இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று மாலை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2 ஆயிரத்து 508-க்கும், ஒரு பவுன் ரூ.20,064-க்கும் விற்பனையானது. இது நேற்று விற்கப்பட்ட விலையைவிட பவுனுக்கு ரூ.320 அதிகமாகும்.
24 காரட் சுத்த தங்கம் (10 கிராம்) நேற்று விலையான ரூ.26,260-ஐ விட ரூ.420 அதிகரித்து இன்று மாலை ரூ.26,680 என்ற விலைக்கு விற்கப்பட்டது. ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் தொடங்கியிருப்பதால் தங்கத்தின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.