

சென்னையில் நேற்று திடீரென சில இடங்களில் லேசான மழை பெய்தது.
காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியவேளையில் வானம் இருண்டு காணப்பட்டது. அதன் பிறகு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்தாலும் பிற பகுதிகளில் வெயில் அடித்தது.
தி.நகர், கோடம்பாக்கம், பெசன்ட் நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான தூறல் போட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று 0.9 மி.மீ. மழை பதிவாகி யிருந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் தணிந்து காணப்படுகிறது.
அதிக பட்ச வெப்பம் 36 அல்லது 37 டிகிரியாக இருந்து வந்தது. அடுத்த 2 நாட்களுக்கு வெயில் மேலும் தணியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பம் 35 டிகிரி யாகவும் குறைந்தபட்ச வெப்பம் 26 டிகிரியாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.