

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத் தில் ஒரு விழாவில் நேற்று தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் சந்திப்பு குறித்து இளங்கோவன் கூறியதற்கு நாங்கள் பதில் அளித்து விட்டோம். அவர் அரசியல் நாகரிகத் துடன் நடந்துகொள்ள வேண்டும்.
காங்கிரஸ், திமுக அரசுகளால் கொண்டுவரப்பட்ட மீத்தேன் திட் டத்தை மத்திய அரசு கைவிட்டுள் ளது. ஷேல் கேஸ் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தால் மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும்.
மேகேதாட்டுவில் அணை கட்ட இதுவரை எந்தவித அனுமதியும் மத்திய அரசு வழங்கவில்லை. அங்கு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுவது தவறு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கர்நாடகத்திடம் இருந்து உரிய நீரை பெற்றுத் தருவது உள்ளிட்ட முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
திசை திருப்பிய ஈ.வி.கே.எஸ்.
புதுக்கோட்டையில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது சந்திப்பை சொச்சைப்படுத்தி பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வன், அதற்கு வருத்தம் தெரிவிக்கா மல் அதை நியாயப்படுத்துவதால் தான் அவரைக் கண்டித்து போராட் டம் நடத்துகிறோம். அவரது இழி வான பேச்சு தமிழக மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பியுள்ளது.
அடிப்படை வசதிகளே இல்லாத புதுக்கோட்டை நகராட்சியை மாநிலத்தின் முதன்மை நகராட்சி யாக தேர்வு செய்திருப்பது வேதனை அளிக் கிறது. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.