

டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.
விண்ணப்பித்த தகுதியான மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டன.
இந்நிலையில் டிப்ளமோ நர்ஸ் சிங் படிப்பு மாணவிகள் சேர்க்கைக் கான கலந்தாய்வு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசி னர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வரும் 31-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. செப். 2-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளன.