

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், மேட்டூர் அணைக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை அதிகளவு பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், மேட் டூர் அணைக்கு நீர்வரத்து படிப் படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர், 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன் தினம் காலை 8 ஆயிரத்து 225 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 10 ஆயிரத்து 114 கனஅடியாக உயர்ந்தது.
தற்போது அணை நீர்மட்டம் 91.40 அடியாக உள்ளது. அணை யில் இருந்து டெல்டா பாசனத் துக்காக 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால், அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.