Last Updated : 05 Feb, 2020 08:12 PM

 

Published : 05 Feb 2020 08:12 PM
Last Updated : 05 Feb 2020 08:12 PM

'பிரசாந்த் கிஷோரிடம் திமுகவை அடமானம் வைத்துவிட்டார் ஸ்டாலின்': அமைச்சர் உதயகுமார்

"தொண்டர்களை நம்பாமல் திமுகவை பிரசாந்த் கிஷோரிடம் அடகு வைத்துவிட்டார் ஸ்டாலின்" என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், "அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிட வேண்டும் என்று முதல்வரும் துணை முதல்வரும் ஆணையிட்டு உள்ளார்கள்.

அதன்படி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் முழுவதும் அன்னதானங்கள், விளையாட்டுப் போட்டிகள் நலத்திட்டங்கள், மருத்துவ முகாம்கள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நாம் சிறப்பாக நடத்த வேண்டும்.

.இதன் ஒரு பகுதியாக செல்வமகள் திட்டத்திற்கு வங்கி டெபாசிட் தொகையை கழக அம்மா பேரவை சார்பில் வழங்கப்பட உள்ளது.

இந்த ஆட்சி இன்று போகும் நாளை போகும் என்று எதிர்க்கட்சிகள் கொக்கரித்தன. ஆனால் இன்றைக்கு எடப்பாடியார் தாக்குப் பிடிக்க முடியும் ஏன் இனிவரும் 2021 ஆண்டிலும் அம்மா அரசு தான் அமையும் என்று அம்மாவின் லட்சியத்தை நனவாக்கி வருகிறார்

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 100% தேர்தலை நியாயமான நடத்தி நாம் வெற்றி பெற்றுள்ளோம். திமுகவை போல நாம் குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. யார் மக்களை விரும்புகிறர்களோ அவர்கள் தான் வரவேண்டும் என்று தர்மத்தின் வழியில் நாம் தேர்தலை நடத்தி மக்களிடத்தில் நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றுள்ளோம்

மிக விரைவில் நகர உள்ளாட்சித் தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம். இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய தொதிகளில் முதல்வரின் சாதனைகளை எடுத்துக்கூறி கழகத்தை 100% வெற்றி பெற வைப்போம் என்று நாம் அனைவரும் சூளுரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எத்தனை திமுக உtகட்சித் தேர்தல் நடந்தாலும் உதயநிதி தான் வரப்போகிறார். திமுக உட்கட்சித் தேர்தல் நடத்துவது தொண்டனை ஏமாற்றும் செயல்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் கட்சிக்குள் தான் ஆலோசனைகளைக் கேட்பர். ஆனால், ஸ்டாலின் பிரசாந்த் கிஷோரிடம் கட்சியை அடமானம் வைத்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் சீட் கேட்க ஸ்டாலின் வீட்டில் கூட்டம் வராது பிரசாந்த் கிஷோர் வீட்டில்தான் கூட்டம் இருக்கும்.

இன்றைக்கு திமுகவை வடநாட்டவரிடம் ஸ்டாலின் அடகு வைத்து விட்டு அறிக்கை வெளியிடுகிறார். ஸ்டாலினுக்கு உண்மை திமுக தொண்டர்கள் மீது மரியாதை இல்லை. எனவே திமுக தொண்டர்களே அணிஅணியாக அதிமுகவிற்கு வாருங்கள்.

கிளைக் கழக செயலாளர் நீங்கள்தான் கழகத்தின் காவல் தெய்வங்கள் நீங்கள் செய்யும் பணியின் மூலம் ஒரு ஸ்டாலின் அல்ல ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் இந்த இயக்கத்தை தொட்டுப் பார்க்க முடியாது" என்று அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x