Published : 04 Feb 2020 11:17 AM
Last Updated : 04 Feb 2020 11:17 AM

சென்னையில் கின்னஸ்  உலக சாதனை முயற்சி: 10,000 பேர் பங்குபெறும்  மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி

சுற்றுலாத்துறை சார்பில் கின்னஸ் உலக சாதனைக்காக சென்னையில் 10,000பேர் பங்குபெறும் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடக்கிறது. இதில் பங்குபெற விரும்புவோர் தொடர்புக்கான முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை செய்திக்குறிப்பு வருமாறு:

“தமிழ்நாடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கும் அவர்களின் தங்கும் நாட்களை நீட்டிப்பதற்கும் விழாக்கள் உறுதுணையாக உள்ளன.
நமது கலை மற்றும் பண்பாட்டை காணவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
1955-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 2000-ம் ஆண்டு வரை கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என அழைக்கப்பட்ட போதிலும், கின்னஸ் புக் ஆப் வேர்ல்டு (The Guinness Book of World Records) என்ற புத்தகத்தை ஒவ்வொரு ஆண்டும் மனித சமுகத்தின் சாதனைகளையும் உலக இயற்கையின் உச்சகட்டங்களையும் வரிசைப்படுத்தி அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெளியிட்டு வருகிறது.

சுற்றுலாத் துறை 10,000 பரதநாட்டிய கலைஞர்களைக் கொண்டு வரும் 08.02.2020 மாலை 4.30 மணியளவில் சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள S.I.V.E.T.கல்லூரியில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியாக சதிர் 10,000 என்ற சிறந்ததொரு நிகழ்ச்சியை நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நடன பள்ளிகளில் உள்ள பரநாட்டிய மாணவர்களை இந்த புகழ்வாய்ந்த நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டு, இந்நிகழ்ச்சி மாபொரும் வெற்றியடைய சுற்றுலாத்துறை அன்புடன் அழைக்கிறது. பங்கு கொண்டவர்களுக்கு சுற்றுலாத்துறை சான்றிதழ் வழங்கும்.

இதில் இலவசமாக பதிவேற்றம் செய்ய கீழ்கண்ட இணையதளத்தை பார்வையிடலாம். http://sadhanaisigaram.com/ibd/register/ தகவலுக்கு ரஹிமான் என்பவரை தொடர்பு கொள்ளலாம். கைபேசி எண் 99947 97110 ”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x