Published : 04 Feb 2020 08:02 AM
Last Updated : 04 Feb 2020 08:02 AM

துப்பாக்கி, தோட்டாக்களின் படங்களுடன் கியூ பிரிவு போலீஸாருக்கு தீவிரவாதிகள் மிரட்டல்: தமிழில் கடிதம் எழுதியவர் குறித்து விசாரணை

டெல்லி சிறப்பு போலீஸார், தமிழக கியூ பிரிவு போலீஸாரை மிரட்டும் வகையில் துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகளின் படத்துடன் தமிழில் எழுதப்பட்ட மிரட்டல் கடிதத்தை சமூக வலைதளத்தில் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்த திட்டம்தீட்டியதாக டெல்லி, பெங்களூரு,சென்னையில் அடுத்தடுத்து 17 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக கியூ பிரிவு போலீஸார் மற்றும் டெல்லி சிறப்பு காவல்படையினரின் தீவிர நடவடிக்கையால் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் சிக்கிவரும் நிலையில், போலீஸாரை மிரட்டும்விதமாக சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

“டெல்லி சிறப்பு போலீஸார், தமிழக கியூ பிரிவு போலீஸாரை கண்காணித்து வருகிறோம். உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று தமிழில் எழுதப்பட்டுள்ள கடிதம் நடுவே வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை சுற்றி அலங்கரித்தது போல ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

இந்த மிரட்டல் கடிதத்தை ‘அல்ஹிந்த் பிரிகேட்’ என்றதீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில்இந்து அமைப்பின் தலைவர்கமலேஷ் திவாரி கடந்த ஆண்டுஅக்டோபரில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்துக்கு அல்ஹிந்த்பிரிகேட் தீவிரவாத அமைப்புதான்பொறுப்பேற்றது.

கடந்த 2014-15 முதல் இந்த அமைப்பினர் இந்தியாவில் இருந்து சிரியாவுக்கு ஐ.எஸ். ஆதரவாளர்களை அனுப்பி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தீவிரவாதிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த மிரட்டல் கடிதம் வந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த அச்சுறுத்தலுக்குப் பின்னால் தமிழ் பேசும் தீவிரவாதக் குழுவினர் இருப்பதாக சந்தேகம்எழுந்துள்ளது. இது வெளிநாட்டில் தங்கியுள்ள தமிழ் பேசும் நபர்களின் வேலையாகக்கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தீவிரவாதிகளின் மிரட்டல்குறித்து தமிழக, டெல்லி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில்போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு, கண்காணிப்புநடவடிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் தங்கியுள்ள தமிழ் பேசும் நபர்களின் வேலையாகக்கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x