

வனத்துறை அமைச்சராக இருந்து பதவியிழந்த எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு மீண்டும் அதே துறைக்கான அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலை மையிலான அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்த வர் எம்.எஸ்.எம்.ஆனந்தன். கடந்த ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக் கில் தண்டனை பெற்ற ஜெய லலிதா, முதல்வர் பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற் றது. அப்போதும் வனத்துறை அமைச்சராகவே ஆனந்தன் நீடித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி, மீண் டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றபோது, அமைச் சரவையில் ஆனந்தன் இடம் பெறவில்லை. ஏற்கெனவே அவர் வகித்து வந்த வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
போக்குவரத்துத்துறை அமைச் சராக இருந்த செந்தில்பாலாஜி, கடந்த 27-ம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, எம்.எஸ்.எம். ஆனந்தன் மீண்டும் தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெய லலிதா பரிந்துரை கடிதம் அனுப்பி னார். அதை ஏற்று, ஆனந்தன், மீண்டும் அமைச்சரவையில் சேர்க் கப்பட்டுள்ளார். அவருக்கு வனத் துறையே வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் அலு வலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பூர் (வடக்கு) சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவான எம்.எஸ்.எம்.ஆனந்தனை தமிழக அமைச்சரவையில் சேர்ப்பது குறித்த முதல்வரின் பரிந் துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூடுத லாக கவனித்து வந்த வனத்துறை, எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஒதுக்கப்படுகிறது.
புதிய அமைச்சர் பதவியேற்பு விழா 9-ம் தேதி மாலை 3 மணிக்கு ராஜ்பவனில் நடக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. 5-வது முறை முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவையில் நடக்கும் 2-வது மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.