Published : 04 Feb 2020 07:16 AM
Last Updated : 04 Feb 2020 07:16 AM

குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அரசு அதிகாரிகள் 20 பேர் தலைமறைவு: காவலர் உட்பட 4 ஊழியர்கள் கைது

குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடு பட்டு, தற்போது அரசு அதிகாரிகளாக இருக்கும் 20-க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குரூப்-2ஏ முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை பட்டினப்பாக்கம் சார்பதிவாளர் அலு வலகத்தில் உதவியாளர்களாக இருக் கும் வடிவு, ஞானசம்பந்தம், செங் குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் பணம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல சென்னை எழிலகத்தில் உதவியாளராக பணிபுரியும் மகா லட்சுமி என்பவரும் தேர்வு முறைகேட் டில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது கணவர் முத்துக்குமார் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் காவலராக இருப்பதும் இடைத்தரகராக செயல்பட்ட காவலர் சித்தாண்டி மூலம் பணம் கொடுத்து தனது மனைவி மகாலட்சுமியை அரசு பணியில் அவர் சேர்த்துவிட்டதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காவலர் முத்துக்குமாரை நேற்று சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்களாக செயல் பட்ட ஜெயக்குமாரும் முதல் நிலை காவலர் சித்தாண்டியும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர் களை சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இடைத்தரகர் ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங் கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேசுவரம் பகுதியில் 6 பள்ளிகளில் தேர்வு எழுதி யவர்களில் சந்தேகத்துக்குரிய 42 பேரின் விவரங்களை சிபிசிஐடி போலீ ஸாரிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஏற்கெனவே கொடுத்திருந்தனர். அதில், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலை யில், மற்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதுதவிர, குரூப்-4 தேர்வு முறை கேட்டில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருக்கும் 99 பேரின் விவரங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத் துள்ளனர். அதில், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை தீவிரமடைந்து இருப்பதால், முறை கேடாக அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதில், தற் போது அரசு அதிகாரிகளாக இருக்கும் 20-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் இருந்து விடுமுறை வாங்கிக் கொண்டு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி நடப்பதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தேர்வு முறைகேட் டில் ஈடுபட்டு பணியில் சேர்ந்ததாக 8 பேரை எழும்பூர் சிபிசிஐடி அலு வலகத்துக்கு அழைத்து வந்து நேற்று விசாரணை நடத்தினர்.

மேலும், முறைகேடாக அரசுப் பணியில் சேர்ந்தவர்கள், தற்போது எந்தெந்த அலுவலகங்களில் பணிபுரிகின்றனர் என்பதை சேகரிக்கும் பணியில் 2 தனிப்படையினர் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x