

புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில மாநாடு வரும் செப்டம்பர் 4-ம் தேதி நடக்கிறது. இதில் திரிபுரா மாநில முதல்வர் மாணிக்சர்க்கார் உட்பட பல தலைவர்கள் பங்கேற்கின் றனர்.
இதுபற்றி மாநாட்டு வர வேற்புக் குழுத் தலைவர் கிருஷ் ணமூர்த்தி, தமிழ் மாநிலச் செய லர் ராஜ்மோகன் ஆகியோர் புதுச்சேரியில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
கல்விச் சூழலில் உரிய மாற்றத்தை ஏற்படுத்த வலி யுறுத்தி வரும் செப்டம்பர் 4, 5, 6-ம் தேதிகளில் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழகம்-புதுச்சேரி மாநில மாநாடு புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதி கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள் கின்றனர்.
வரும் 4-ம் தேதி ஆயிரக் கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் பேரணி, பொதுக் கூட்டம் நடக்கிறது. 5, 6-ம் தேதிகளில் ஜெயராம் திருமண மண்டபத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.