அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்திய விநாடி - வினா இறுதி போட்டிக்கு 3 பள்ளிகள் தேர்வு

சென்னையில் அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய அறிவியல் விநாடி - வினா திருவிழாவின் இறுதிக்கட்டப் போட்டியில் பங்கேற்க தேர்வுசெய்யப்பட்ட குழுக்களுடன் குவிஸ் மாஸ்டர் அரவிந்த் ராஜீவ், சென்னை போர்ட் டிரஸ்ட்டின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி பி.ரவீந்திர பாபு, மிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.அமுதன், காமராசர் போர்ட் லிமிடெட் மேலாளர் பி.பாஸ்கரன் ஆகியோர் உள்ளனர்.

Updated on
1 min read

அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங்உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய அறிவியல் திருவிழா விநாடி - வினா போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அறிவியல் திருவிழாவில் நடைபெற்ற விநாடி - வினா போட்டியில் சென்னையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இந்தப் போட்டி சென்னை முகப்பேரில் உள்ள எஸ்பிஐஓஏ பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விநாடி - வினா போட்டியில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 170-க்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வை குவிஸ் மாஸ்டர் அரவிந்த் ராஜீவ், அஜய் கிருஷ்ணா இருவரும் நடத்தினர்.

இந்த போட்டியில் முதல் சுற்று எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற அணிகள் பங்கேற்றன. இதில், இறுதிச்சுற்றுப் போட்டிக்கு எஸ்பிஓஏ ஸ்கூல் அன்ட் ஜூனியர் காலேஜ் மற்றும் பி.வி.பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பரிசுகளையும் சென்னை போர்ட் டிரஸ்ட்டின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி பி.ரவீந்திர பாபு வழங்கினார்.

இந்நிகழ்வில், அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.அமுதன், காமராசர் போர்ட் லிமிடெட் மேலாளர் பி.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in