

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் 1,200 வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஊதிய உயர்வு பரிந்துரை ஏற்கப்பட வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து வங்கி ஊழியர்கள் சங்சங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற இப்போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 178 அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் 1,580 பேரில் 1,200 ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும், ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் 130 வங்கிகள் அடைக்கப்பட்டன. ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் வங்கிகளின் அன்றாடப் பணிகள் நேற்று பாதிக்கப்பட்டன.