

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்.5-ம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவுக்கு ஐந்து நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்புள்ளது என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது:
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்.5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜை பிப்.1-ம் தேதி தொடங்குகிறது. எனவே, பிப்.1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களில் மொத்தம் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவுக்காக பிப்.5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
யாகசாலை பூஜைகளுக்காக 11,900 சதுர அடி பரப்பளவில் யாகசாலை கூடம் அமைக்கப் பட்டுள்ளது. இதில், 110 யாக குண்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. யாகசாலை பூஜைகளை 400-க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், பண்டிதர்கள் நடத்தவுள்ளனர்.
பாதுகாப்புக்கு 4,492 போலீஸார்
பாதுகாப்புப் பணியில் 4,492 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள் ளனர். கண்காணிப்பு பணிக்காக 192 கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன. 17 இடங்களில் காவல் உதவி மையங்களும், 55 தகவல் அறிவிப்பு மையங்களும் அமைக்கப்படுகின்றன. மேலும், 6 இடங்களில் கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காகக் கதவுகளுடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்படவுள்ளன. பக்தர்கள் ஒரு வழிப்பாதையில் மட்டுமே அனுமதிக்கப்பப்படுவர். தீயணைப்புத் துறை சார்பில் 30 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன.
சிறப்புப் பேருந்துகள்
பக்தர்களின் வசதிக்காக நகரைச் சுற்றியுள்ள புறவழிச்சாலையில் 21 தற்காலிக வாகன நிறுத்துமிடங் கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வருவோரின் வசதிக்காக 225 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும் புதிய பேருந்து நிலையம், கரந்தை பேருந்து நிலையம் மட்டுமில்லாமல், பட்டுக்கோட்டை சாலையில் புதுப்பட்டினத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையங்களிலிருந்து ரயிலடி வரை 175 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக பள்ளி, கல்லூரிப் பேருந்துகள், வேன்கள் உள்ளிட்டவை பயன் படுத்தப்படவுள்ளன. பக்தர்கள் எளிதாகக் கோயிலுக்குச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதேபோல, சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. ஏற்கெனவே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்காலிக வாகன நிறுத்துமிடங் களில் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்துவதற்காக வருவாய்த் துறையினர், காவல் துறையினர், மாநகராட்சிப் பணியாளர்கள் என தலா 15 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலணி, உடமைகளுக்கான பாதுகாப் பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஏறத்தாழ 1,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 30 பேட்டரி கார்கள், மாற்றுத்திறனா ளிகளுக்காக 130 இரு சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநகரில் 275 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் அமைக் கப்படவுள்ளன. இவற்றில் 10 குடிநீர் லாரிகள் மூலம் அவ்வப்போது நிரப்பப்படும். மேலும், 238 தற் காலிக கழிப்பறைகள் அமைக் கப்படுகின்றன. 800 குப்பைத் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குப்பையை அள்ளிச் செல்ல 25 லாரிகள் பயன் படுத்தப்படவுள்ளன. சுகாதாரப் பணிகளுக்காக 1,500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 26 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக் கப்படவுள்ளன. 13 ஆம்புலன்ஸ் கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத் தப்படவுள்ளன.
காத்திருப்புக் கூடங்கள்
நடந்து செல்லும் பக்தர்களும், வயதானவர்களும் ஓய்வு எடுக்கக் காத்திருப்புக் கூடங்கள் அமைக் கப்படுகின்றன. பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
இலச்சினை வெளியீடு
இதையடுத்து, பெரிய கோயில் குடமுழுக்கு விழா இலச்சினையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.