

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் கரை சேர்ந்தது பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும்தான்.
தமிழகத்தில் 37 தொகுதிகளை வாரிச் சுருட்டிய அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளி கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.
தமிழக பாஜகவில் இரண்டாவது முறையாக தலைவராக இருந்துவரும் பொன்.ராதாகிருஷ்ணன் திருமணம் ஆகாதவர். சட்டம் படித்தவர். 1999 முதல் 2004 வரையிலான வாஜ்பாய் தலைமையிலான அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தார்.
நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வசித்துவரும் பொன்.ராதாகிருஷ்ணன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது மோடி அமைச்சரவையில் அவருக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது