

டெண்டர் பெறப்படாத நிலையில் பாரத் நெட் திட்டத்தில் ஊழல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது விந்தையாக இருப்பதாக வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாறு தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது விந்தையாக உள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகளை பணி மாற்றம் செய்வது எல்லா ஆட்சியிலும் நடந்து வரும் நிகழ்வாகும். இதற்கு உள்அர்த் தம் கற்பித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு சாதகமாக இல்லை என்ற காரணத்தால் திமுக ஆட்சியில் கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த உமாசங்கர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மக்கள் வரிப்பணத் தில் உருவாக்கப்பட்டுள்ள அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனமும் முடக்கப்பட்டது. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
பாரத் நெட் உள்கட்டமைப்பு திட்ட டெண்டரில் முறைகேடு என்று அடிப் படை ஆதாரம் இல்லாத, கற்பனை யான பொய் குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போதுதான் இந்த திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இன்னும் நிறு வனங்களிடம் இருந்து தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளியோ, விலைப்புள் ளியோ பெறப்படாத நிலையில் ஊழல் என்று கூறுவதுதான் விந்தை யாக உள்ளது. அவர் விரக்தியின் விளிம்பிலிருந்து பேசி வருகிறார்.
இவ்வாறு அறிக்கையில் அமைச் சர் கூறியுள்ளார்.