

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு உயர்கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் டி.ஜெயக் குமார், கே.பி.அன்பழகன், கே.ஏ.செங் கோட்டையன், சி.வி.சண்முகம், பி.தங்கமணி மற்றும் தலைமை செய லாளர் கே.சண்முகம், நிதித்துறை (செலவினம்) செயலாளர் கிருஷ்ணன், சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக் குமார், உயர்கல்வி துறை செய லாளர் அபூர்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இடஒதுக்கீட்டுக்கு எந்த வகை யிலும் பிரச்சினை வராத வகையில் சிறப்பு அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிப்பது குறித்தும், பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிப்பது எப்படி, அப்படி பிரித்தால் என்னென்ன வசதி களை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்போது இடஒதுக்கீட் டுக்கு எந்த பாதிப்பும் வராத வகை யில் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்தோம். இது தொடர்பாக இன்னும் விரிவாக ஆராய துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்க லைக்கழக மானியக்குழு நிதியை பெறுவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இந்த துணைக் குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். எந்த காலத்திலும் அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயர் மாற்றப்படாது. எப்போதும்போல அண்ணா பெயரிலேயே இயங்கும்’’ என்றார்.