Published : 28 Jan 2020 07:04 AM
Last Updated : 28 Jan 2020 07:04 AM

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் மக்கள்தொகை கணக் கெடுப்பை நடத்துவது குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் 10 ஆண்டு களுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த முறையிலான கணக் கெடுப்பு, கடந்த 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி, 15-வது மக்கள்தொகை கணக் கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 16-வது மக்கள்தொகை கணக் கெடுப்பு 2021-ம் ஆண்டு நடத்தப் பட உள்ளது. சுதந்திர இந்தியாவின் 8-வது மக்கள்தொகை கணக் கெடுப்பு இதுவாகும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, முன்னதாக மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண் டும். குறிப்பாக, கணக்கெடுப்பு நடத்துவதில் எழும் சிக்கல்கள், குழப்பங்களை சீரமைக்க இந்த மாதிரி கணக்கெடுப்பு உதவியாக இருக்கும். அதன் அடிப்படையில், மாதிரி கணக்கெடுப்பு நடத்தும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 12 முதல் செப்.30-ம் தேதி வரை மாதிரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு காஞ்சி புரம், சிவகங்கை, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் இப்பணிகள் நடந்தன.

இதற்கிடையே, குடியுரிமைச் சட்டம் தொடர்பான திருத்தம் வெளி யிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து பல்வேறு தரப் பினரும் போராட்டம் நடத்தி வரு கின்றனர். சட்டப்பேரவையிலும் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட் டது. பல்வேறு முஸ்லிம் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து, தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2 கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. முதல்கட்டத்தில், வீடுகள் கணக்கெடுப்பும் அடுத்த கட்டமாக தனிநபர் கணக்கெடுப்பும் நடத்தப் பட உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூன் முதல் ஜூலை 15-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் மக்கள்தொகை கணக் கெடுப்பை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான ஆலோ சனைக் கூட்டம், முதல்வர் பழனி சாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கணக்கெடுப்பு நடத் தப்படும் காலம், பணியாளர்கள், கணக்கெடுப்பில் எந்த மாதிரியான கேள்விகள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, அவர்களது பெயர், திருமண விவரம், குழந்தைகள் விவரம் உள்ளிட்டவை முக்கியமாக இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், டிஜிட்டல் முறையில் கைபேசி செயலி மூலம் கணக்கெடுப்பை விரைவாக நடத்தி முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்டபோது, நாடு முழுவதும் 121 கோடியே 2 லட்சம், தமிழ கத்தில் 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 என்ற அளவில் மக்கள்தொகை இருந்தது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x