Published : 27 Jan 2020 09:41 PM
Last Updated : 27 Jan 2020 09:41 PM

கரோனோ வைரஸ்- பொதுமக்கள் பயப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்தவ சேர்க்கை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை, அனைத்து மாநில மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஏற்கனவே எபோலா, நிபா வைரஸ் காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப்போல் இதற்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் . தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் எந்தவித பதட்டமும் அடையத் தேவையில்லை. மத்திய அரசு கரோனா வைரஸை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சித்த மருத்துவ முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதனை இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநரிடம் அளித்து ஆய்வு செய்து சரியாக இருந்தால் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளின் பணிகள் முடிந்து மாணவர்கள் சேர்க்கை நடைபெற மேலும் ஒரு வருடம் ஆகும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x