Last Updated : 27 Jan, 2020 04:39 PM

 

Published : 27 Jan 2020 04:39 PM
Last Updated : 27 Jan 2020 04:39 PM

ஆதரவற்றோர் உதவித்தொகை கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ரகளை

ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் அருகே உள்ள மீசலூரைச் சேர்ந்த விஜயராகவன் என்பவரது மனைவி ராஜலட்சுமி. கணவர் இறந்துவிட்டதாலும் குழந்தைகள் இல்லாததாலும் தனியாக வசித்து வருகிறார். ஆதரவற்ற தனக்கு உதவித்தொகை வழங்கக்கோரி இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

அலுவலக நுழைவுவாயில் பகுதியில் ராஜலட்சுமியை நிறுத்திய போலீஸார் சோதனையிட்டபோது அவர் தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் கலந்து கொண்டுவந்தது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தியபோது, தான் மாவட்ட ஆட்சியரைப் பார்க்க வேண்டும் எனக்கூறி பெண் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும், தரையில் படுத்து உருண்டு ராஜலட்சுமி அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து, போலீஸார் அவரை சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச்சென்றனர். தனக்கு ஆதரவாக யாரும் இல்லை எனக் கூறி தனக்கு உதவித்தெகை வழங்குமாறு ராஜலட்சுமி கோரிக்கை விடுத்தார்.

அப்போது திடீரென மீண்டும் தான் ரயிலில் விழுந்து தற்கொலை செய்யப் போகிறேன் என்று கூறி மீண்டும் ரகளையில் ஈடுபட்டார். அதையடுத்து, போலீஸார் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x