Published : 27 Jan 2020 09:42 AM
Last Updated : 27 Jan 2020 09:42 AM

பாஸ்போர்ட் புதுப்பித்தலை நினைவூட்ட புதிய நடைமுறை: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

கோவை

உரிய காலத்தில் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில், புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மண்டலபாஸ்போர்ட் அலுவலர் ஜி.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘உரிய காலத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கபலர் மறந்துவிடுகிறார்கள்.

எனவே, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக் கான காலக்கெடு முடிவடைவதற்கு முன்பாகவே, பாஸ்போர்ட்டை புதுப்பிக்க பாஸ்போர்ட்தாரர்களுக்கு நினைவூட்டும் வகையில் தகவல் அனுப்ப, இந்திய வெளியுறவு அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி, பாஸ்போர்ட்டுக்கான காலாவதி தேதிக்கு 7 மற்றும் 9 மாதங்களுக்கு முன்னதாகவே, சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட்தாரரின் செல்போனுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும். அதில், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கும்.

பெரும்பாலான நாடுகள், குறைந்தபட்சம் 6 மாத அவகாசம் வைத்துள்ள பாஸ்போர்ட்தாரர்களை மட்டுமே, அந்தந்த நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கின்றன. எனவே, குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு முன்பே பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்வது நல்லது.

இதுகுறித்து பாஸ்போர்ட்தாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உரிய காலத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உதவும் வகையிலுமே இதுபோன்ற நடைமுறைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் கொண்டுவந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x