

எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை வீணாக்காமல் சேமிக்க பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கட்டிடங்களின் மொட்டை மாடியில் பெய்யும் மழை நீரை குழாய் மூலம் பூமிக்குள் செலுத்துவது மட்டுமல்லாமல் கட்டிடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழை நீரையும் சேமித்து வைக்கலாம். வீடுகளின் நுழைவாயில் அருகே கால்வாய் ஏற்படுத்தி அதிலிருந்து நீரூட்டல் கிணறுகளுக்கு தண்ணீரை செலுத்தி சேமிக்கலாம்.
இந்த நடவடிக்கைகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தவிர்க்கலாம். கட்டிடங்களை சுற்றியுள்ள இடங்களில் பெய்யும் மழை நீரை சேமிப்பதற்கு அமைக்க வேண்டிய கட்டமைப்புகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைக்கு 044 2845 4080, 4567 4567 என்ற எண்ணில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.